Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான மேலதிக தகவல்!!!


(அலுவலக செய்தியாளர்) 
 
திருகோணமலை மத்திய மீன் சந்தையில் ஆறு ஊழியர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலை மத்திய மீன் சந்தை இன்று (24) மூடப்பட்டுள்ளது.

22 ஆம் திகதி 39 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளின்  முடிவுகளின்படி, அவர்களில் 06 பேருக்கு கோவிட் 19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அடையாளம் காணப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகரத்தைச் சுற்றியுள்ள சுமேதகம, உப்புவெளி மற்றும் புல்மோட்டை பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.