Header Ads

Breaking News
recent

கொரொனா தொற்றாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளதால், எதிர்வரும் வாரமும் முக்கியமானது : இராணுவத் தளபதி


(எம்.சல்மான்) 
கொரொனா தொற்றாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளதால், எதிர்வரும் வாரமும் முக்கியமானது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (18) தெரிவித்தார்.

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த கொரேனா நோயாளிகள் 16 மாவட்டங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும், இவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் 

கொண்டுள்ளவர் அதனை மறைத்து இருக்கும் குழுவினர் இருந்தால், அவை அடுத்த வாரம் தொற்று உறுதியாகலாம் என்று அவர் கூறினார்.

கொழும்பு துறைமுக கப்பல்துறை நிறுவனத்தின் ஐந்து ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

Powered by Blogger.