Header Ads

Breaking News
recent

துவிச்சக்கர வண்டியுடன் வேன் மோதல்

 வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை வேன்  மோதியதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று  காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன்  மற்றுமொரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில்

எதிர்த்திசையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிரந்த முதியவரை   மோதித்தள்ளியுள்ளது.

 இவ் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Powered by Blogger.