Header Ads

Breaking News
recent

வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான அவசர கூட்டம்

 (முஸாதிக் - முசலியூரான்)

முசலி சவேரியார்புரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது  தொடர்பான அவசர கூட்டம் முசலி பிரதேச செயலாளர் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இக்கூட்டதில்   மீன்களை கொள்வனவு செய்வதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் வாகனங்களுக்கு

 தொற்று நீக்கம்  செய்யப்பட்டு உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கல், பிரதேசத்திற்கு கலர் மீன் பிடிப்பதற்கு வருகை தருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்

புத்தளத்தில் இருந்து முசலி பிரதேசம் மற்றும் முசலிப் பிரதேசத்திலிருந்து புத்தளம் செல்பவர்கள் பயணங்களை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுதல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள்  பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. 

இதற்கு முப்படையினர் தங்களின் பூரண பங்களுப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் முசலி பிரதேச செயலாளர், பிரதேச சபை  தவிசாளர்,  முசலி சுகாதார வைத்தியர், முசலி சுகாதார பரிசோதகர்கள், சிலாவத்துறை பொலிஸ் பொறுப்பு அதிகாரி, கடற்படை, இராணுவ அதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகதர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.