அக்கரைப்பற்று மக்களுக்கு விசேட எச்சரிக்கை!!!
அதி சுகாதார அபாய வலயமாக அக்கரைப்பற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
58 கொரோனா தொற்றாளர்கள் அக்கரைப்பற்று பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், கல்முனை பிரதேசத்திலும் தற்போது வரை 86 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ லதாகரன் தெரிவித்துள்ளார்.
