கொரோனா வைரஸ் மூலம் உயிரிழக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி : ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ
கொரோனா வைரஸ் மூலம் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று சற்று நேரத்திற்கு முன்னர் அனுமதி வழங்கியுள்ளார்.
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் நாட்டின் எந்தப் பகுதியில், முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும், அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்குமாறும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய (09) அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று சற்று நேரத்திற்கு முன்னர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்ஹ் றிஸ்வி முப்தி உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

