Covid-19 விஷேட துஆ பிரார்த்தனை ( மஹாசியம்பலாகஸ்கட)
நாடளாவிய ரீதியில் உள்ள பௌத்த, இந்து, மதஸ்தலங்களிலும் கொரோனா பரவலை விட்டும் பாதுகாப்புத் தேடி விசேட பிரார்தனைகளை மேற்கொள்ளுமாறு
கௌரவ பிரதமரும், புத்தசாசன, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வேண்டி கொள்ளப்பட்டதற்கு அமைய விசேட துஆப் பிரார்த்தனை
இன்று மதவாச்சி மஹாசியம்பலாகஸ்கட மொஹைதீன் ஜும்மா பள்ளியில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இடம்பெற்றது.
இந்நிகழ்வு மஸ்ஜிதின் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் சுகாதார வழிமுறைகளும் பேணப்பட்டது
பள்ளி பரிபாலன சபையின் தலைவர் P.K. அப்துல் ஹமீத் மற்றும் உப தலைவர் I. இஸ்ஸதீன் மௌலவி மற்றும் செயலாளர் அஸ்லம் சுஜான் மேலும் பொருளாளர் ஹைதர் அலி ஆகியவர்களோடு ஊரில் உள்ள அனைத்து உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பள்ளிவாயலின் பிரதான கதீப் மௌலவி முஜாஹித் (நிழாமி) துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




