புத்தாண்டுக்கு முன்னர் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க நேரிடும் : வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்...

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சீனி, வெண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பில் தமது சங்கம் பலமுறை அரசாங்கத்திற்கு அறிவுறுத்திய போதும் இதுவரை அது குறித்த உரிய தீர்வு கிடைக்கப்பெறாமையால் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
எனினும் பாணின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.