நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் மின் தடை : முழு விபரம் உள்ளே!!!!

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் திடீர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அனுராதபுர புதிய மின் விநியோக கட்டமைப்பில் இன்று மாலை 7.00 மணியளவில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரு காரணமாகவே இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக, மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன எமது MAX தமிழ் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில், மின்சாரத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள், விரைவாக இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, குறித்த பகுதிளுக்கான மின் இணைப்பு மிக விரைவில் வழங்கவுள்ளதாக, மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் குறிப்பிட்டார்.