பஸ் விபத்தில் இருவர் காயம்!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்விபத்து இன்று (03) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தூக்க கலக்கத்தினாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.