Header Ads

Breaking News
recent

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் விசேட அறிவித்தல்!



முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்களுக்கான விசேட அறிவித்தலை பொலிஸ் நிலையத்தின் ஒலி பெருக்கி ஊடக அறிவித்துள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போது எமது மாவட்டமான முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனால் முடக்கப்பட்ட தேவிபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மல்லிகைத்தீவு, மந்துவில், கோம்பாவில், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு, வள்ளிபுனம்

ஆகிய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனால் முடக்கப்பட்டுள்ளதால் அநாவசியமாக வெளியே செல்ல வேண்டாம்.

மக்கள் அனைவரும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.