Header Ads

Breaking News
recent

புதுக்குடியிருப்பு பிரசேத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் பலவற்றுக்கான அன்டிஜன் பரிசோதனை....


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரசேத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் பலவற்றுக்கான அன்டிஜன் பரிசோதனைகள் இன்று 28.05.21 முன்னெடுக்கப்பட்டுள்ளன

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவந்த ஆடைத்தொழில்சாலையுடன் தொடர்புடைய 350ற்கு மேற்பட்டவர்களுக்கு கடந்த 17.05.21 அன்று கொரோனா தொற்று இனம்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பங்கள் மற்றும் தொற்றாளர்களுடன் முதற்தொடர்பினை பேணியவர்கள் என பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு தொடர்பினை பேணிய முதற்தொடர்பாளர்கள் சுமார் 1500 பேர்ருக்கு அன்டிஜன் அல்லது பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் மு.உமாசாங்கர் அவர்கள் கடந்த 24.05.21 அன்று மாவட்ட செயலக கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார பணிமனையினர் கோம்பாவில்,திம்பிலி பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான அன்டிஜன் பரிசோதனையினை மேற்கொள்ளும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆடைத்தொழில்சாலையுடன் தொடர்புடைய அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட 9 கிராமசேவைபிரிவுகள் கடந்த 20.05.21 ஆம் திகதி தொடக்கம் முற்றாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.