வீட்டிலிருந்து சிகிச்சைப்பெற முடியாது-அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெறுவதற்கு அல்லது தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கின்ற எந்த தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த பெரேரா இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நோயாளர் கட்டில்களை வழங்குவது கொரோனா தொற்றுக்கான நிரந்தர தீர்வாக அமையாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.