திருகோணமலை கப்பல் துறை பகுதியில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சந்திக்க லக்மால் ஜயலத் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் உப்புவெளி-ஆனந்தபுரி, முதலாவது ஒழுங்கையைச்சேர்ந்த யோகா தாசன் லக்சன் (23வயது) வினவும் பொலிசார் தெரிவித்தனர்.
குடும்பத்தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கப்பல் துறையில் உள்ள அவரது மனைவியின் வீட்டுக்கு வருகை தந்து தனது மனைவியின் தாய் தந்தையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் மாமனாரான அதே பகுதியைச் சேர்ந்த பெர்ணாந்து குமார் (47வயது) என்பவரை வாளால் வெட்டியுள்ளார்.
இதே நரம் அவரது மாமியாரான 43 வயது உடைய முத்துமாரி என்பவர் சண்டையை தடுக்க சென்றுள்ளார்.
அவ்வேளையில் சந்தேகநபரான யோகதாசன் லக்சன் என்பவருடைய 6 மாத குழந்தை மாமியாரின் கையில் இருந்ததாகவும், இதன்போது மாமனாருக்கு வெட்டிய வால் வெட்டு 6 மாத குழந்தையின் தலையில் பட்டதாகவும், இதனையடுத்து குறித்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டு இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில
ஆஜர்படுத்தப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது