Header Ads

Breaking News
recent

நேற்றைய தினம் நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றினால் மரணம்


நேற்றைய தினம் நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,814 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 247,337 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 212,825 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.