Header Ads

Breaking News
recent

கந்தளாயில் இடம்பெற்ற வீதி விபத்தில் 7பேர் வைத்தியசாலையில் - (PHOTO & VIDEO)

(ADMIN)
கந்தளாய்-கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பௌத்த பிக்கு உட்பட ஏழு பேர் படு காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவித்தனர்

இன்று (17) மாலை கந்தளாய்-கொழும்பு பிரதான வீதி 87 ஆம் கட்டை பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு கொழும்பிலிருந்து மூதூர் சேருவில விகாரைக்கு வருகை தந்து வழிபாடுகளை நிறைவு செய்து விட்டு மீண்டும் சேருவில பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே பிக்குகள் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பௌத்த பிக்கு உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த 7 பேரும் தற்போது கந்தளாய் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருவதக்கவும் தெரிவிக்கப்படுகின்றது.






Powered by Blogger.