Header Ads

Breaking News
recent

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
அல் ஹிக்மா பவுண்டேஷனின் அனுசரணையுடன் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது

நோற்று (16) அல் ஹிக்மா பவுண்டேஷன் அலுவலகத்தில் அல் ஹிக்மா பவுண்டேஷன் பணிப்பாளர் மதிப்புக்குரிய அஷ்ஷெய்க் முகம்மது அப்பாஸ் இபாதுள்ளா  அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்தது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட வெள்ளைமணல் கிராமத்தில் இயங்கிவரும்
அல் ஹிக்மா பவுண்டேஷன் மூலம் கிண்ணியா மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் சுமார் 50து குடும்பங்களுக்கு இவ்வாறு
உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது

அல் ஹிக்மா பவுண்டேஷன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் நலனுக்கான பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர் அவர்களின் சேவைகள் மென்மேலும் சிறக்க வேண்டும் என இன் நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ நௌபர் அவர்களினால் வாழ்த்துகள் தொரிவிக்க பட்டத்துடன்

மேலும் அல் ஹிக்மா பவுண்டேஷன் பணிப்பாளர் மதிப்புக்குரிய அஷ்ஷெய்க் முகம்மது அப்பாஸ் இபாதுள்ளா, நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளுக்கும்   நன்றிகளையும் தெரிவித்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.