Header Ads

Breaking News
recent

திருமலையில் தாய் உட்பட ஒன்பது மாத கைக்குழந்தைக்கு கொரோனா...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மஹாதிவுள்வெவ புபுதுப்புர பிரதேசத்தில் தாய் மற்றும் அவரின் ஒன்பது மாத கைக்குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நேற்று (07) காய்ச்சல்,தொண்டை வலி,இருமல் என மஹாதிவுள்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சமுக்கமளித்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி தேன்படுவதாக சந்தேகித்து குறித்த 35 வயதுடைய பெண்ணுக்கு மேற்க்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந் நிலையில் குறித்த நபரின் 9மாத கைக்குழந்தைக்கும் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் மேற்றக்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவரின் ஒன்பது மாத கைக்குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் இவருடன் நெருங்கிய தொடர்பினை ஏட்படுத்தியிருந்த 14 வயது சிறுமிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதகவும் மேலும் கொமரங்கடவால பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொரோனா தொற்றுக்குள்ளான தாயின் கணவருக்கும் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்றப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது

இது தொடர்பில் அவரின் கணவர் உட்பட உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்க்கொள்வதட்கான ஏட்பாடுகள் முன்னெடுத்துள்ளதாக மஹாதிவுள்வெவ பொது சுகாதார பரிசோதகர் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது





Powered by Blogger.