Header Ads

Breaking News
recent

திருமலையிலும் வெடித்த அரசுக்கு எதிரான போராட்டம்...


அரசுக்கு எதிரான போராட்டங்கள் இலங்கையின் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று திருகோணமலை நகரிலும் இளைஞர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை நகரில் போக்கு வரத்திற்காக பயன்படுத்தப்படும் இரு பிரதான வீதிகளையும் வழிமறித்து குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் 22ம் படைப்பிரிவு சந்தியினை வழிமறித்த இளைஞ்ஞர்கள் ஒன்றிணைந்து விலை வாசிக்கு எதிராக இந்த அரசு கலைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட அதே நேரம் திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியில் ஶ்ரீமாபுரம் சந்தியில் வீதியை வழிமறித்தும் டர்களை எரித்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன் காரணமாக பல மணினேரம் போக்குவரத்து தடைப்பட்டதுடன் மாற்று வீதிகளூடாக பொதுமக்கள் பயணிக்க முடியாத காரணத்தினால் பாரிய அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.



Powered by Blogger.