Header Ads

Breaking News
recent

நாளை எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி...



நாடு முழுவதும் நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் நாளைய தினம் விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்காரணமாக எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Powered by Blogger.