Header Ads

Breaking News
recent

நாளை திருமலையில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்.



திருகோணமலை தோப்பூர் எல்லைக்குள் வசிக்கும் குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நாளை காலை 2022.07.21ம் திகதியளவில் தோப்பூர் அல் ஹம்தா மைதானத்தில் வழங்கப்படும்.



எனவே எரிவாயு வழங்கும் செயற்பாடானது 2022ம் ஆண்டின் மே மாத மின்சார பட்டியல் பரீசிலிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே தங்களுக்கான எரிவாயு வழங்கப்படும் என திருகோணமலை லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்தார்.




மேலும் நாளைய தினம் 750 குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாகவும். 




ஏனைய குடும்பங்களுக்கான எரிவாயு எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும் எனவும்.




தோப்பூர் எல்லைக்கு அப்பால் வசிக்கும் குடும்பங்களுக்கான எரிவாயு பிறிதொரு நாளில் வழங்கப்படும் என திருகோணமலை லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்தார்.






Powered by Blogger.