வருடாந்த ஹஜ் விளையாட்டுப் போட்டியும் அல்-ஹூசைனியா விளையாட்டு கழகம் உதயமும்...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மட்கோ மகாமாயபுர பிரதேசத்தில் வருடாந்த ஹஜ் விளையாட்டுப் போட்டிகளும் அல்ஹைனியா விளையாட்டு கழகமும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஏற்பட்டு வந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக முஸ்லிம்கள் தமது பெருநாளினை தமது இல்லங்களில் மாத்திரம் கொண்டாடி வருகின்ற நிலையில் அவர்களின் அந்த மன நிலையில் இருந்து மீண்டு வரும் நோக்கில் இந்த வருடம் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஹஜ் பெருநாள் விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்று இருந்தன.
குறித்த போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்.
இன்றைய தினம் அல் - ஹுசைனியா விளையாட்டுக் கழகத்தின் உத்தியோகபூர்வமான ஆரம்ப நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.
குறித்த பிரதேசத்தில் இனமத மொழி பேதம் இன்றி சமூக நல்லிணக்கத்தை கட்டி எழுப்பும் நோக்கில் குறித்த அல்-ஹுசைனியா விளையாட்டு கழகம் உருவாக்கப்பட்டதாகவும் இளைஞர்கள் இந்த ஸ்மார்ட் காலகட்டத்தில் தமது பொன்னான நேரங்களை வீணான வழிகளிலும், போதைவஸ்து பழக்கவழக்கங்களில் தமது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் குறித்த பிரதேசத்தில் இலை மறை காயாக இருக்கின்ற பல இளைஞர்கள் நமக்கான ஒரு களம் இல்லாத நிலையில் தடுமாற்றம் அடையும் நிலையில் குறித்த விளையாட்டு கழகத்தின் ஊடாக தமது திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பம் அனைத்து இளைஞர்களுக்கும் கிடைக்கும் எனவும் குறித்த நோக்கில் குறித்த கழகம் உருவாக்கப்பட்டதாக கழகத்தின் அமைப்பாளரும் கழகத்தின் உத்தியோகபூர்வ பயிற்றுவிப்பாளருமான எஸ். எப். அமீர்டீன் தெரிவித்தார்.
மேலும் வெகு விரைவில் குறித்த அல்-ஹுசைனியா விளையாட்டு கழகத்தநூடாக திருகோணமலையில் மாபெரும் உதைப்பந்தாட்ட சமர் ஒன்றும் ஆரம்பமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.













